கொரோனாவால் 70 லட்சம் பேருக்கு  வேலைஇழப்பு : ஆய்வில் அதிர்ச்சி தகவல் 

by Editor / 24-07-2021 08:21:22pm
 கொரோனாவால் 70 லட்சம் பேருக்கு  வேலைஇழப்பு : ஆய்வில் அதிர்ச்சி தகவல் 

 

கொரோனா இரண்டாம் அலையால் மீண்டும் உயிரிழப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஊரடங்கு அறிவிப்புகளும் வந்துகொண்டிருக்கின்றன. இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்தியாவில் வேலையின்மை விகிதம் 8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது முந்தைய நான்கு மாதங்களில் மிகப் பெரிய பின்னடைவாகும். முன்னதாக மார்ச் மாதத்தில் வேலையின்மை விகிதம் 6.5 சதவீதமாக மட்டுமே இருந்தது.


ஏப்ரல் மாதத்தில் மட்டும் கொரோனா பிரச்சினையால் சுமார் 70 லட்சம் பேர் தங்களது வேலையை இழந்துள்ளதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நகர்ப்புறங்களில் வேலையின்மை பிரச்சினை அதிகரித்துள்ளது.

வேலையின்மை விகிதம் நகர்ப்புறங்களில் 9.78 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. அதேநேரம், கிராமப்புறங்களில் வேலையின்மை விகிதம் 7.13 சதவீதமாக இருக்கிறது. கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்படாவிட்டால் மே மாதத்தில் இதை விட அதிகமாக வேலையின்மை விகிதம் உயரும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

 

Tags :

Share via