பசுபதி பாண்டியன் கொலை வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

by Staff / 09-09-2023 12:34:51pm
பசுபதி பாண்டியன் கொலை வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவன தலைவராக இருந்த பசுபதிபாண்டியன், திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டியில் வசித்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பசுபதிபாண்டியன் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார், தூத்துக்குடி ஆறுமுகநேரியைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார், அருளானந்தம், திண்டுக்கல்லை சேர்ந்த முத்துபாண்டியன், நந்தவனபட்டியை சேர்ந்த நிர்மலா உள்பட 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதில் முத்துப்பாண்டியன், நிர்மலா உள்பட 5 பேர் கொல்லப்பட்டுவிட்டனர். இதற்கிடையே பசுபதிபாண்டியன் கொலை வழக்கு திண்டுக்கல் சிறப்பு நீதமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கின் விசாரணையை 27ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
 

 

Tags :

Share via
Logo