60 உயிர்களை காப்பாற்றியவர் மாரடைப்பால் உயிரிழந்த சோகம்

by Staff / 31-01-2024 04:49:37pm
60 உயிர்களை காப்பாற்றியவர் மாரடைப்பால் உயிரிழந்த சோகம்

மேற்கு வங்கத்திலிருந்து ஒடிசா மாநிலம் பால்சோர் மாவட்டத்தில் உள்ள பஞ்சலிங்கேஸ்வரர் கோவிலுக்கு 60 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. வழியில், படாபூர் சௌக் என்ற இடத்தை நெருங்கும்போது பேருந்து ஓட்டுநர் ஷேக் அக்தருக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. வலியால் துடித்தபோதும் பேருந்தை பாத்திரமாக நிறுத்திய அவர், சில நொடிகளிலேயே மாரடைப்பால் உயிரிழந்தார். இறக்கும்போது கூட தங்கள் அனைவரையும் காப்பாற்றிவிட்டு உயிரிழந்துள்ளார் என்று பயணிகள் வேதனையோடு தெரிவித்தனர்.

 

Tags :

Share via

More stories