ஸ்ரீநகரில் பள்ளிக்குள் 2 ஆசிரியர்களை சுட்டுக்கொன்ற  தீவிரவாதிகள்

by Editor / 07-10-2021 08:04:04pm
ஸ்ரீநகரில் பள்ளிக்குள் 2 ஆசிரியர்களை சுட்டுக்கொன்ற  தீவிரவாதிகள்

ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் வியாழனன்று அரசு மாணவர் மேல்நிலைப்பள்ளிக்குள் புகுந்த தீவிரவாதிகள் பள்ளியின் தலைமை ஆசிரியரையும் மற்றொரு ஆசிரியரையும் சுட்டுக்கொன்றனர்.தீபக் சந்து என்ற மற்றொரு ஆசிரியரும் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து விளக்கப்பட்டது உருவாக்கப்பட்ட எதிர்ப்பு முன்னணி என்ற அமைப்பு பள்ளி ஆசிரியர்கள் இரண்டு பேரையும் சுட்டுக் கொன்றதாக சமூக இணையதளத்தில் உரிமை கோரியுள்ளது.
ஷாஹித் காஜி குழு பள்ளி ஆசிரியர்களை கொன்றதாக தெரிவித்துள்ளது.


கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ஜம்மு காஷ்மீரை ஆக்கிரமித்து உள்ளவர்களின் கொடிக்கு வணக்கம் செலுத்தும் வழி இந்த இரண்டு ஆசிரியர்களும் மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் வற்புறுத்தினார்கள் என்று எதிர்ப்பு முன்னணி கூறியுள்ளது.ஆசிரியர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட பள்ளிக்கூடத்திற்கு மாநில போலீஸ் இயக்குனர் ஜெனரல் தில்பாக்சிங் நேரில் வந்தார்.ஸ்ரீநகரில் உள்ள முஸ்லிம்களுக்கு எதிராக இந்துக்கள் அகற்றப்பட வேண்டும் அதன்மூலம் காஷ்மீரில் பகுப்பு பிரிவினை எண்ணம் வேறு ஒன்று வேண்டும் என்பது தான் தீவிரவாதிகளின் திட்டம் என்று அவர் கூறினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை ஸ்ரீநகரில் மருந்து கடை வைத்திருந்த காஷ்மீர் பண்டிட் டும் மேலும் இரண்டு சிவிலியன்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த ஆண்டு இதுவரை பொதுமக்களில் 27 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.

 

Tags :

Share via

More stories