மனைவியின் மூளையை சமைத்து சாப்பிட்ட கணவன்

by Staff / 07-07-2023 04:18:16pm
மனைவியின் மூளையை சமைத்து சாப்பிட்ட கணவன் மெக்சிகோவில் உள்ள பியூப்லா பகுதியில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. அல்வாரோவின் மனைவி மரியா மான்செராட் (வயது 32) சமீபத்தில் உயிரிழந்தார். இவர் தனது மனைவி மரியாவை ஜூன் 29 ஆம் தேதி அன்று கொலை செய்துவிட்டு, பின்னர் அவளது மூளையை டாகோஸ் (ஒரு பாரம்பரிய மெக்சிகன் உணவு) உடன் சமைத்து சாப்பிட்டுள்ளார். மேலும் மனைவியின் மண்டை ஓட்டை ஆஷ் ட்ரேயாக இவர் பயன்படுத்தி உள்ளார். சமீபத்தில் இவர்களது வீட்டிற்கு உறவினர்கள் சென்று பார்த்த போது இந்த விஷயம் தெரிய வந்தது. உடனடியாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
 

Tags :

Share via