இன்னொரு தாஜ்மஹால்.-. பீ பிகா-மக்பாரா

தாஜ்மஹால் ,தன் மனைவி மும்தாஜ் மீது கொண்ட காதலின் வெளிப்பாடாக ஷாஜஹானால் கட்டப்பட்ட அழகோவியம்.அன்பின்,காதலின் மகத்துவத்தை,உலகுக்கு உணர்த்திய , வாழ்ந்த உயிரின் குறியீடு.திருமணத்திற்குபிறகும் காதல் சாகாது வாழும் என்பதற்கான வழிகாட்டி தாஜ்மஹால்... தம் தந்தை என்று கூட பார்க்காமல் ,தம் ஆட்சியில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்த ஔரங்கேசிப் தமக்கும் மனைவி மீது மட்டற்ற காதலுண்டு என்பதை புலப்படுத்த எழுப்பப்பட்டதே பீபி கா மக்பாரா.ஔரங்கேசிப் துணைவியார் ரபியா-உட்-துராணி நினைவை போற்றும்விதமாஎழும்பிநிற்பது.தாஜ்மஹால்போன்று கட்டப்பட்டாலும் வெளிப்புறம் சரிவரஅமைக்கப்படவில்லை.சலவைக்கற்களால் கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன.உட்புறம் சலவைக்கற்களால்அழகுகுறபதிக்கப்பட்டிருக்கின்றன.தாஜ்மஹாலை போல ஒர் அழகிய கட்டடமாக இல்லாமல் போனாலும்இதற்கென்று ஒரு தனித்துவமான ஈர்ப்பு உள்ளது.இந்த இடத்தை சுற்றிஒரு உயரமான சுற்றுச்சுவர்எழுப்பப்பட்டுள்ளது.உள்வழி ஒரு வளைவு போன்றதாகும்.இரு புறமும் நீர் வீழ்ச்சி போன்ற அமைப்பு உள்ளது.
Tags :