யெஸ் வங்கியின் நிகர லாபம் ரூ.228 கோடி

by Staff / 22-10-2023 12:08:01pm
யெஸ் வங்கியின் நிகர லாபம் ரூ.228 கோடி


யெஸ் (YES) வங்கி இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் (Q2) வங்கி ரூ. 228.64 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் காலாண்டில் பதிவான ரூ.160.41 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 47 சதவீதம் அதிகமாகும். ஆனால் இந்த ஆண்டு ஜூன் காலாண்டில் ரூ.347 கோடியுடன் ஒப்பிடுகையில், வங்கியின் லாபம் குறைந்துள்ளது. யெஸ் வங்கியின் நிகர வட்டி வருமானம் 2ஆம் காலாண்டில் ரூ.1,925 கோடியாக இருந்தது.

 

Tags :

Share via