பால் மற்றும் மதுபானங்களுக்கான வரி 20 சதவீதம் உயர்வு

by Staff / 07-07-2023 04:14:13pm
பால் மற்றும் மதுபானங்களுக்கான வரி 20 சதவீதம் உயர்வு கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் சித்தராமையா ஜூலை 7 ஆம் தேதி இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சமீபத்தில் தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து கர்நாடக மாநிலம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களுக்கான கூடுதல் கலால் வரி 20 சதவீதம் அதிகரிக்கப்படும் என இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பீர் மீதான கூடுதல் கலால் வரியும் 175-ல் இருந்து 185 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த பட்ஜெட்டில் பாலுக்கான வரியை 20 சதவீதம் உயர்த்தியுள்ளது கர்நாடக அரசு.    
 

Tags :

Share via