மத்திய அரசுபத்ம விபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளுக்கான 2027 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

by Admin / 28-04-2026 01:57:54pm
மத்திய அரசுபத்ம விபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளுக்கான 2027 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று கலை, இலக்கியம், விளையாட்டு, அறிவியல், சமூகப்பணி, மருத்துவம் ,கல்வி ,பொது சேவை போன்ற துறைகளில் சிறந்த சாதனை புரிந்த தனி நபர்கள் அல்லது அமைப்புகளுக்கு வழங்கப்படும் பத்ம விபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளுக்கான 2027 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இவ்விருதை பெற தகுதி உள்ள நபர்களை தனி நபர்கள் அல்லது அமைப்புகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 31ஆம் தேதி. இவ்விருதிவிற்காக பரிந்துரைக்கப்படும் நபர் சமூகத்திற்கு முன்மாதிரியாகவும் தன்னலமற்ற சேவை செய்தவராகவும் இருக்க வேண்டும் என்றும் பரிந்துரையில் 800 வார்த்தைகளுக்கு மிகாமல் பரிந்துரைக்கப்படும் நபரின் சாதனைகள் குறித்த விபரக் குறிப்பு இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் சிபாரிசுகளை ராஷ்டிரிய புரஸ்கார்  போர்டல்  (https://awards.gov.in) இணையதளம் வழியாக பதிவு செய்து கொள்ளலாம்.

 

Tags :

Share via
Logo