தோட்டத்து காய்கறியை சாப்பிட்ட தந்தை, 2 மகள்கள் பலி

by Editor / 23-07-2025 12:03:49pm
தோட்டத்து காய்கறியை சாப்பிட்ட தந்தை, 2 மகள்கள் பலி

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் நாயக் (38) - பத்மா (35) தம்பதி. இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் இருக்கின்றனர். நேற்று முன்தினம் (ஜூலை 21) தோட்டத்தில் விளைவித்த காய்கறிகளில் உணவு சமைத்து சாப்பிட்டுள்ளனர். அவர்களுக்கு மயக்கம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், தந்தை மற்றும் மகள்கள் நாகரத்னா (8), தீபா (6) ஆகியோர் உயிரிழந்தனர். காய்கறிக்கு அடிக்கப்பட்ட பூச்சி கொல்லி மருந்தால் உணவு விஷமாகி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via