இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தா அருகே உள்ள பெகாசி பகுதியில் பயங்கர ரயில் விபத்து

by Admin / 28-04-2026 02:21:16pm
இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தா அருகே உள்ள பெகாசி பகுதியில் பயங்கர ரயில் விபத்து

நேற்று இரவு இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தா அருகே உள்ள பெகாசி பகுதியில் பயங்கர ரயில் விபத்து நிகழ்ந்தது. 14 பேர் உயிரிழந்துள்ளனர்.. பெகாசி தீமூர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பயணிகள் ரயிலின் பின்புற பெட்டியில் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் ஒன்று பின்புறம் மோதியதில் சுமார் 84 பேர் காயம் அடைந்துள்ளனர்.. இவர்களில் 14 பேர் உயிரிழந்து உள்ளனர் .அவர்கள் உடல்கள் மேற்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன விபத்துக்குள்ளான ரயில்களில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் இன்று காலை வரை தொடர்ந்தன. இரும்பு தகடுகளை வெட்டி எடுக்கும் கருவிகளைக் கொண்டு மீட்பு படையினர் பயணிகளை மீட்டு வருகின்றனர். காயமடைந்தவர்கள் பெகாசியில் உள்ள ஆர்எஸ் யூ டி மருத்துவமனை உள்பட அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தா அருகே உள்ள பெகாசி பகுதியில் பயங்கர ரயில் விபத்து
 
Tags :

Share via
Logo