மனைவியை வெட்டி கொலை செய்துவிட்டு தானும் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவர்.

by Admin / 28-04-2026 11:00:37pm
மனைவியை வெட்டி கொலை செய்துவிட்டு தானும் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவர்.

சென்னை நங்கநல்லூரில் மனைவியின் நடத்தையின் காரணமாக அவரை கொலை செய்துவிட்டு கணவரும் தற்கொலை செய்து கொண்டார் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. சென்னை நங்கநல்லூர் தில்லை நகரை சேர்ந்த 52 வயது சுப்பிரமணியன் அவரது மனைவியின் நாகலட்சுமி மனைவியை வெட்டி கொலை செய்துவிட்டு தானும் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.. நாகலட்சுமி நங்கநல்லூரிலும் அண்ணா நகரில் சொந்தமாக பட்டுச்சேலை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார் இவர் தன்னுடைய தொழிலை வளர்க்கும் முகமாக இன்ஸ்டாகிராம் யூடியூபில் சேலை விற்பனையை பிரபலப்படுத்தும் நோக்கில் ரீல்ஸ்களை மற்றும் வீடியோக்களை போட்டு அதன் மூலம் பிரபலமாகி வந்தார். தொழில் ரீதியாகவும் பலரிடம் கடன் பெற்றிருக்கிறார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு அவரது கணவர் சுப்பிரமணியன் மதுரையில் தன் சகோதரி வீட்டிற்கு சென்று பல நாட்கள் அங்கே தங்கி உள்ளார். சமீபத்தில் தான் அவர் சென்னை வந்து தங்கி இருந்த பொழுது தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மனைவியை கொலை செய்து தூக்கில் இட்டுக் கொள்வதற்கு முன்பாக தன்னுடைய இரண்டாவது மகன் தனியார் கல்லூரியில் மருத்துவம் படித்து வருபவருக்கு வீட்டில் உனக்கு சாப்பாடு வைத்திருக்கின்றோம். நீ வீடு திரும்பிய போது அம்மாவும் நானும் உயிரோடு இருக்க மாட்டோம் என்று வாட்ஸ் அப் வழியாக செய்தியை அனுப்பி இருக்கிறார். செய்தியை பார்த்த மகன் அதிர்ச்சி அடைந்து வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது அம்மா ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளா.ர் அப்பாவும் பக்கத்து அறையில் தூக்கிலிட்டு இறந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார்.. காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .அடுத்து அவர்கள் இருவரது உடலையும் கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தலைக்கு பயன்படுத்திய அரிவாளையும் போலீசார் பறிமுதல் செய்ததோடு விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளன மூத்த மகன் ரஷ்யாவில் மருத்துவம் பயின்று வருகிறார், இளைய மகன் சென்னையில் தனியார் கல்லூரியில் மருத்துவம் பயின்று வருகிறார்.

 

 

Tags :

Share via

More stories

Logo