விஜய்க்கு சூப்பர் ஸ்டார் பட்டம் மீது ஆசையில்லை நடிகர் ராகவா லாரன்ஸ்

by Staff / 01-09-2023 02:07:36pm
விஜய்க்கு சூப்பர் ஸ்டார் பட்டம் மீது ஆசையில்லை நடிகர் ராகவா லாரன்ஸ்

சூப்பர் ஸ்டார் பட்டத்தின் மீது நடிகர் விஜய்க்கு ஆசை இல்லை என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், "நடிகர் விஜய் எப்போதுமே தானாக முன்னுக்கு வர நினைப்பவர். நமக்கு நாமே போட்டி என்பதை அவரே பலமுறை மேடைகளில் கூறியுள்ளார்."என்று கூறினார். மேலும் அவரிடம் தான் பேசும்போதெல்லாம் தலைவர் எப்படி இருக்கிறார் என நலம் விசாரிப்பார் எனவும் லாரன்ஸ் கூறினார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories