வருமான வரித்துறை பாஜகவின் கூட்டாளிகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

திமுக அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் உள்ள வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாஜகவின் கூட்டாளிகளாக அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையும் இருந்து வருவதாக விமர்சனம் செய்துள்ளார். மேலும், இது குறித்து பேசிய அவர், "இது வழக்கமான ஒன்றுதான், தேர்தல் நெருங்குவதால் அடிக்கடி சோதனை என்ற பெயரில் மிரட்டி பார்க்க நினைக்கிறார்கள்" என தெரிவித்துள்ளார்.
Tags :