டெங்கு காய்ச்சல் - மதுரை அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு

by Staff / 18-05-2024 01:11:16pm
டெங்கு காய்ச்சல் - மதுரை அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில், டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 25 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனைக்கு வரும் குழந்தைகளுக்கு நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via