இந்தியாவில் தயாராகும் 527 மசாலாக்களில் பூச்சிக்கொல்லி

இந்தியாவில் முன்னணி நிறுவனங்களால் தயாரிக்கப்படும் 527 உணவு மற்றும் மசாலா பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்கள் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். எத்திலீன் ஆக்சைடு என்பது பூச்சிக்கொல்லியாகவும், கிருமி நீக்கம் செய்யும் பொருளாகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் நிறமற்ற வாயு ஆகும். இது இந்த மசாலாக்களில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே எவரெஸ்ட், MDH குழுமத்தின் மசாலாக்களில் எத்திலீன் ஆக்சைடு இருப்பதைக் ஹாங்காங் ஆய்வாளர்கள் கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது.c
Tags :