நேபாளத்தில் நிலச்சரிவு - 6 பேர் பலி

by Editor / 03-09-2021 02:48:38pm
நேபாளத்தில் நிலச்சரிவு - 6 பேர் பலி

நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 6 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நேபாளம் நாட்டின் பார்பட் மாவட்டத்தில் பெய்த கனமழையால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் இருந்த சிலர் சிக்கிக்கொண்டதை அடுத்து அவர்களை மீட்கும் பணியில் இருக்கும் மீட்புப்படையினர் இதுவரை 6 சடலங்களை மீட்டு இருக்கிறார்கள்.

இதுகுறித்து காவல்துறை சார்பில் அளிக்கப்பட்ட தகவலில் , ' திடீரென ஏற்பட்ட கனமழையால் நிலச்சரிவு உண்டாகி சிலர் உள்ளே புதைந்தனர் . தற்போது வரை 6 பேர் பலியாகியிருக்கிறார்கள். இருவர் மாயமாகி இருக்கிறார்கள்' எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பருவக்காற்று ஆரம்பமானதைத் தொடர்ந்து இமைய மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த கனமழை பொழிவதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பது

 

Tags :

Share via