கும்பகோணத்தில் ஜூலை 10ல் பாமக மாநாடு

ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு நீடித்துவரும் நிலையில், ராமதாஸ் தலைமையில் இன்று மாலை தலைமை நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. அதே நேரம் அன்புமணி ஆதரவாளர் சங்கர் தலைமையில் இன்று மாலை திண்டிவனத்தில் ஆலோசனைக்கு கூட்டம் நடைபெறுகிறது. இப்பிரச்னைக்கு இடையே தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் கும்பகோணத்தில் ஜூலை 10ல் நடைபெறுகிறது. ராமதாஸ் இந்த பொதுக்குழுவில் கலந்துகொள்ள உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Tags :