விஜய்க்கு ஆதரவு.. கையை அறுத்து கொண்ட விசிக தொண்டர்
தவெக தலைவர் விஜய்க்கு விசிக ஆதரவு கொடுக்க வேண்டும் என்று விசிக தொண்டர் பாபு, பிளேடால் கையில் அறுத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் அவரை மீட்டு கேகே நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கொடுப்பது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் இன்று (மே.9) மாலை 4 மணிக்கு மேல் அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விசிக தொண்டர்கள், விஜய்க்கு ஆதரவு வழங்க வலியுறுத்தி வருகின்றனர்.
Tags :



















