நாகையிலிருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுடன் 9 மீனவர்கள் மாயம்.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் சம்பாதோட்டம் மீனவர் கிராமத்தை சேர்ந்த வளர்மதிசெல்வமணி என்பவரது விசைப்படகில் கடந்த 29ஆம் தேதி அதிகாலை நாகை மீன்பிடி துறைமுகத்திலிருந்து செல்வமணி உட்பட 9 பேர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். கடந்த 1ம் தேதி நடுக்கடலில் விசைப்படகு பழுதாகி உள்ளது. 3 விசைபடகுகளில் சக மீனவர்கள் கடலில் தேடியும் கிடைக்காததால் விமானம் மற்றும் கடற்படை மூலம் படகு மற்றும் மீனவர்களை மீட்க கோரிக்கை.
Tags : நாகையிலிருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுடன் 9 மீனவர்கள் மாயம்