லியோ திரைப்படத்தின் முதல் காட்சி டிக்கெட் ஒன்று 1லட்சத்து 10 ஆயிரத்து ஒரு ரூபாய்க்கு விற்பனை....

லியோ திரைப்படம்!!! கோவில்பட்டியில் திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து, மேள தளம் முழங்க பாலாபிஷேகம் செய்து கொண்டாட்டம்
இயக்குனர் லோகஸ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் தமிழகத்தில் இன்று காலை 8 மணிக்கு வெளியாக உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சத்தியபாமா, சண்முகா, லெட்சுமி என 3 திரையரங்குகளில் 7 ஸ்கீரிகளில் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து மேள தாளம் முழங்க கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.விஜய் படத்திற்கு மாலை அணிவித்து, வண்ண வண்ண கலர் மத்தப்புகளால் படத்திற்கு காண்பித்து வருகின்றனர் .டி.ஜே. வீலிங் என்று ரசிகர்கள் அசத்திய ரசிகர்கள் விஜய் படத்திற்கு பாலாபிஷேகம் செய்து அசத்தி வருகின்றனர்இந்த காட்சியின் முதல் டிக்கெட்டை கோவில்பட்டி சென்ட்ரல் லயன்ஸ் கிளப் மாவட்ட தலைவர் செல்வின் சுந்தர் என்பவர் 1லட்சத்து 10 ஆயிரத்து ஒரு ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்று வரும் இலவச கல்வி பயிலகத்திற்கு வழங்கும் வகையில் இவ்வளவு விலை கொடுத்து வாங்கியதாக தெரிவித்துள்ளனர்.

Tags :