மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழை - குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு.

by Staff / 23-07-2025 11:05:58am
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழை - குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு.

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் தற்போது வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டுள்ளது.

 குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீரின் சீற்றம் அதிகரித்து காணப்பட்டு வந்ததன் காரணமாக கடந்த 4 நாட்களாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் குற்றாலம் பகுதியில் உள்ள மற்ற அருவிகளான ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டன.

 அதனைத்தொடர்ந்து ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவியிலும் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு நேரத்தில் பெய்த கனமழையின் காரணமாக தற்போது குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கானது ஏற்பட்டுள்ளது.

 இதன் காரணமாக, சுற்றுலா பயணிகள் குளிக்க தடையானது விதிக்கப்பட்டுள்ள நிலையில், சாரல் திருவிழாவானது தற்போது நடைபெற்று வரும் நிலையில் குற்றாலம் மெயின் அருவியில் இன்று 5-வது நாளாக குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற அருவிகளிலும் நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் பகுதிக்கு வருகை தந்து அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடனே திரும்பி சென்று வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Heavy rains in the Western Ghats - flooding at the Courtala Falls.

Share via

More stories

Logo