குடியரசு துணைத்தலைவர் பதவிக்கு ஆகஸ்ட் இறுதிக்குள் தேர்தல்

by Editor / 23-07-2025 11:37:05am
குடியரசு துணைத்தலைவர் பதவிக்கு ஆகஸ்ட் இறுதிக்குள் தேர்தல்

குடியரசு துணைத்தலைவர் பதவிக்கு ஆகஸ்ட் இறுதிக்குள் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் 21ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த கூட்டத்தொடரிலேயே தேர்தலை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தனகர் ராஜினாமா செய்துள்ள நிலையில், 60 நாட்களுக்குள் புதிய துணைத்தலைவரை தேர்வு செய்ய வேண்டும்.

 

Tags :

Share via