நீட் தேர்வு 100% ரத்து செய்யப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

by Editor / 26-06-2021 08:08:00pm
நீட் தேர்வு 100% ரத்து செய்யப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 

 சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கரோனா உச்சத்தில் இருந்த காலத்தில் செய்யப்பட்ட அளவுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 1.30 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மேற்கு மண்டலத்தை சேர்ந்த 9 மாவட்ட மருத்துவர்கள் உடன் காணொலியில் ஆலோசிக்கப்பட்டது.
அரசு மருத்துவமனைகளுக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஏற்படுவதற்காக பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகப்பேறு பரிசோதனைக்கு வரும் தாய்மார்களுக்கு யோகா, மூச்சுப்பயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விரும்பிய தேதியில் குழந்தை பிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிசேரியன் செய்வது அதிகரித்துள்ளது.
அவசியம் இருந்தால் மட்டுமே சிசேரியன் செய்யப்பட வேண்டும். விருப்பத்தின் பேரில் சிசேரியன் செய்வது ஏற்கத்தக்கது அல்ல. இதனால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கும். சுகப்பிரசவத்தில் குழந்தை பெறுவதற்கு ஊக்குவிக்கப்படும். தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வு 100 சதவீதம் ரத்து செய்யப்படும். மாணவர்கள் பயிற்சிக்கு செல்வதை தடுத்து ஒருவேளை காலதாமதம் ஏற்பட்டால் எதிர்காலம் பாதிக்கப்படும்.
நீட் எதிர்ப்பு தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு சென்றால் அது ஒப்புதலோடுதான் திரும்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via

More stories

Logo