தமிழகத்தின் 9 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

by Editor / 24-10-2023 10:10:23am
தமிழகத்தின் 9 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

தமிழகத்தின் 9 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடலில் ஹமூன் புயல் உருவாகியுள்ளதை அடுத்து, சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், தூத்துக்குடி, பாம்பன் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. வங்கதேச கடலோரப்பகுதியில் அக்டோபர் 25ஆம் தேதி புயல் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

Tags : தமிழகத்தின் 9 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது

Share via

More stories

Logo