ஆளுநரை மாற்ற வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

by Staff / 27-10-2023 12:24:36pm
ஆளுநரை மாற்ற வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரையாவது ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்ற வேண்டாம் என பிரதமர், உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் திருமண விழா ஒன்றில் பேசிய அவர், "திமுக அரசுக்கு ஆளுநர்தான் தொடர் விளம்பரம் செய்து கொடுக்கிறார். கடந்த 2 நாட்களாக அவர் தொடர்ந்து புருடா விட்டு வருகிறார். தமிழ்நாடு மக்கள் ஆளுநர் ரவியை பொருட்படுத்தவில்லை. பெரிய பெரிய பதவியில் இருப்பவர்கள் திராவிடம் என்றால் என்ன என்று கேட்கிறார்கள். அவர்களின் பதவியே வேஸ்ட்தான். திராவிடம் என்றால் என்ன என்று கேட்க வைத்திருப்பதுதான் திராவிடம். இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via