ரஜினியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசிய சசிகலா

by Editor / 07-12-2021 05:08:53pm
 ரஜினியை  மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசிய சசிகலா

தமிழக அரசியலில் நாளுக்குநாள் பரப்பரப்புக்கள் அதிகரித்து வருகின்றன.யார் யார் எங்கு செல்கிறார்கள்..என்ற சுழற்சிகள் அரங்கேறிவருகின்றன.இந்த நிலையில் உள்ளாட்சித்தேர்தலுக்கான ஆயத்தபணிகளில் அரசியல் கட்சிகள் முனைப்புக்களை கட்டிவருகின்றன.இந்த நிலையில் இன்று போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்திற்கு  சசிகலா செல்வதாக தகவல்கள் பரவியதால் ஏரளமான செய்தியாளர்கள் அங்கு திரண்டனர்.நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது, அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் உடன் இருந்தார்.  ரஜினியின் உடல்நிலை குறித்தும் சசிகலா கேட்டறிந்தார்.

மேலும் ரஜினிகாந்த் கலையுலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு, தனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களையும்,அவர் தெரிவித்துக் கொண்டார். போயஸ் தோட்டபகுதியிலேயே 20 க்கும் மேற்பட்ட ஆண்டுகள் இருந்திருந்தாலும் ரஜினி வீட்டுக்கு சசிகலா செல்வது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடதக்கது.


 

 

Tags :

Share via