இரண்டாவது நாளாக மழை வெள்ளப்பகுதிகளைப் பாா்வையிட்டாா் முதல்வர்.

by Editor / 08-11-2021 10:32:13pm
இரண்டாவது நாளாக மழை வெள்ளப்பகுதிகளைப் பாா்வையிட்டாா் முதல்வர்.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மூன்று தினங்களாக மழை விடாது பெய்து வருகிறது.இதனால்,சென்னை முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுகிறது.இதனிடையே புழல்,செம்பரம்பாக்கம் ஏரிகளிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதாலும் பல்வேறு பகுதிகள் தண்ணீரில்  தத்தளிக்கிறது.

போக்குவரத்துதடைபட்டதோடு,மக்கள்இயல்புவாழ்கைபாதிப்படைந்துள்ளது.நேற்றுகொளத்தூர்,புரசைவாக்கம்,எழும்பூர்,ஓட்டேரி,சைதாப்பேட்டை,வேளச்சேரி,துரைப்பாக்கம்,பாடி உள்ளிட்ட பகுதிகளைப்பார்வையிட்டார். இன்று வட சென்னையில் உள்ள பெரம்பூர்,கண்ணதாசன் நகர் உள்ளிட்ட பகுதிகளையும் பார்வையிட்டவர்,பின் நிவாரண பொருள்களையும் வழங்கினார்.

 

Tags :

Share via

More stories

Logo