பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்.

by Editor / 12-10-2021 08:20:15pm
பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்.

தங்கப்பதக்கம், பைரவி உள்ளிட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார். 1965-ல் இயக்குனர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை திரைப்படத்தில் அறிமுகமானார்  ஸ்ரீகாந்த். சிவாஜி, கணேசன், முத்துராமநம் ஜெய்சங்கர் உள்ளிட்ட நடிகருடன் இணைந்து நடித்தவர் ஸ்ரீகாந்த்.


ஸ்ரீகாந்த் 1960களில் இருந்து தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வரும் ஒரு மூத்த நடிகர் ஆவார். இவர் 1965 இல் இயக்குநர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியின் நெருங்கிய நண்பரான இவர், திரையுலகில் நுழையும் முன் அமெரிக்கத் தூதரகத்தில் பணிசெய்தார்.


 இவர் நிறைய படங்களில் சிவாஜி கணேசன், முத்துராமன் , ஜெய்சங்கர் போன்ற நடிகர்களோடு துணைப் பாத்திரங்களில் நடித்தார். பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களோடு எதிர்நாயகனாகத் தோன்றினார். ரஜினி கதாநாயகனாக நடித்த முதல் படமான பைரவியில் முதன்மை எதிர்நாயகனாக நடித்தது இவரேயாவார். இவர் கதைநாயகனாக நடித்து 1974 இல் வெளிவந்த திக்கற்ற பார்வதி திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்றது.


ஸ்ரீகாந்த் தமிழில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சில குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்
வெண்ணிற ஆடை (1965), நாணல் (1965),ராஜபார்ட் ரங்கதுரை (1973),அன்புத்தங்கை (1974),வைரம் (1974),    தங்கப்பதக்கம் (1975),பைரவி (1978), நூற்றுக்கு நூறு,காதல் கொண்டேன் (2003)

 

Tags :

Share via