நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாள்

by Admin / 23-01-2022 03:54:51pm
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாள்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலை இந்தியா கேட் பகுதியில் நிறுவப்படும் என பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 21ஆம் தேதி அறிவித்தார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாளை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடும் நேரத்தில், கிரானைட் கற்களால் ஆன அவரது பிரமாண்ட சிலை இந்தியா கேட்டில் நிறுவப்படும் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது அவருக்கு இந்தியா கடன்பட்டிருப்பதற்கான அடையாளமாக இருக்கும்” என்று அந்த ட்வீட்டில் பதிவிட்டுள்ளார்.
பிரமாண்ட சிலை கட்டப்படும் வரை, அதே இடத்தில் ஹாலோகிராம் மார்பளவு சிலை இருக்கும் என்றும், நேதாஜியின் பிறந்தநாளான ஜனவரி 23-ம் தேதி ஹாலோகிராம் சிலையை திறந்து வைப்பதாகவும் பிரதமர் மோடி மற்றொரு ட்வீட்டில் தெரிவித்தார்.

"நேதாஜி போஸின் பிரமாண்ட சிலை கட்டி முடிக்கும் வரை, அதே இடத்தில் அவரது ஹாலோகிராம் சிலை இருக்கும். நேதாஜியின் பிறந்தநாளான ஜனவரி 23ஆம் தேதி ஹாலோகிராம் சிலையை திறந்து வைப்பேன்.

 

Tags :

Share via