சபரிமலை மண்டல பூஜைக்கான முன்னேற்ப்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

by Editor / 01-10-2023 09:10:18pm
சபரிமலை மண்டல பூஜைக்கான முன்னேற்ப்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.


சபரிமலை மகர விளக்கு மண்டல பூஜைகளுக்காக முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மகர விளக்கு மண்டல பூஜைகாலத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட ஆயத்த பணிகளை  மாநில அரசு தொடங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகளோடு மாவட்ட நிர்வாகமும் கலந்து கொண்டு ஆலோசனைக் கூட்டத்தினை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் சபரிமலை  பாதைகளை சுத்தப்படுத்தப்படுவதற்கு ஆயிரம் பணியாளர்களை நியமிப்பதற்கு மாநில அரசாங்கத்திற்கு பரிந்துரைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர்.  திவ்யா.எஸ் ஐயர் தெரிவித்தார்.மேலும் சன்னிதானம், பம்பை, நிலக்கல், பந்தளம், குளநடத்தல் தீர்த்தோதனப் பாதைகள் சுத்தம் செய்ய இவர்களுக்கு கடந்த ஆண்டு 450 ரூபாய் வழங்கப்பட்டது.  இந்த பாதையை மேம்படுத்துவதற்கு இந்த ஆண்டு பரிந்துரைக்கப்படுகிறது.  இந்த பணிக்காக பணியாற்றும் பணியாளர்களுக்கு பயணப்படி1000 ரூபாய் வழங்கப்படும். என்றும் இந்தபுனிதப்பணியில் ஈடுப்படும் தொழிலாளர்களுக்கு  பார் சோப், பாத் சோப், எண்ணெய், மாஸ்க், க்ளௌஸ் போன்ற அத்தியாவசிய பொருட்கள்  அரசு நிறுவனங்களில் இருந்து நேரடியாக வாங்கப்படும்,
 யூனிஃபோம், ட்ராக் சூட்,  சானிடேஷன் கருவிகள், யூனிஃபார்மில் முத்திரை பதிப்பித்தல்  ஆகியவற்றிற்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்படுமென்றும், தூய்மைபணிக்காக 14 டிராக்டர் டெயிலர்கள் வாடகைக்கு எடுக்கப்படும்.  சன்னிதானம், பம்பை ஆகிய இடங்களில் மூன்று வாகனம் வீதமும், நிலக்கல் பகுதியில் எட்டு டிராக்டரும் பணியில் ஈடுப்படுத்தப்படுமென்றும்,
 சபரிமலை சன்னிதானம் சொசைட்டியின் 2022-23 ஆண்டு வரவு செலவு கணக்குகள் இந்த கூட்டத்தில்  அங்கீகரிக்கப்பட்டது. கடந்த சபரிமலை தீர்த்தடன காலத்தின் புனித ஸ்தாபனத்தின் செயல்பாடுகள் சிறந்ததாக இருந்தது என்று மதிப்பிடப்பட்டது.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் மாவட்ட காவல் துறை அதிகாரி  வி.அஜித், ஏ.டி.எம்.பி.  ராதாகிருஷ்ணன், திருவல்ல உதவி ஆட்சியர் சஃப்னா நஸ்ருதீன், வாஸ்துவித்யா குருகுலம் நிர்வாக இயக்குனர் டி.ஆர்.சதாசிவன் நாயர், பேரிடர்நிவாரணம் மாநகராட்சி ஆணையாளர்  டி.ஜி.  கோபகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சபரிமலை மண்டல பூஜைக்கான முன்னேற்ப்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
 

Tags : சபரிமலை மண்டல பூஜைக்கான முன்னேற்ப்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

Share via

More stories