பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் -11,மகாகவி நாள்"-ஆக கடைப்பிடிக்கப்படுகிறது
மகாகவி பாரதியார் மறைந்து நூறு ஆண்டுகள் ஆகியும், தமிழ் சமுதாயத்திற்காக அவர் விட்டுச் சென்ற கவிதைகள், கட்டுரைகள், பாடல்கள் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் உயிரோட்டமாக இருக்கும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாரதியாரின் நினைவைப் போற்றுகின்ற வகையில், அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவாக 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அதன்படி அவற்றில் ஒன்றான பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் -11 (நாளை), "மகாகவி நாள்"-ஆக கடைப்பிடிக்கப்படுகிறது.மகாகவி நாளான நாளை காலை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து, மகாகவி பாரதியாரின் உருப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள்.
Tags :