ட்ராவல்ஸ் நிறுவன அதிபர் தற்கொலை.. தாம்பரத்தில் பேரதிர்ச்சி.

by Editor / 23-05-2021 11:29:44am
ட்ராவல்ஸ் நிறுவன அதிபர் தற்கொலை.. தாம்பரத்தில் பேரதிர்ச்சி.

ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவமனையில் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

சென்னை தாம்பரம் சேலையூர் ரத்தினமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். ராஜேந்திரன் டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளால் அவதிப்பட்டு வந்த ராஜேந்திரனுக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் இருந்துள்ளது.

இதையடுத்து, உடனடியாக அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதனால் சிகிச்சைக்காக கடந்த செவ்வாய்க்கிழமை சேலையூரில் உள்ள சுந்தர் என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மூச்சு திணறல் அதிகமாக இருந்த நிலையில், ஆக்சிஜனுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மருத்துமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பதாக கூறி, ராஜேந்திரனை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உறவினர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இரவு மட்டும் இங்கு சிகிச்சை அளிக்குமாறும், மறுநாள் மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக உறவினர்கள் கேட்டுக் கொண்ட நிலையில், அவர்கள் இரவு வீட்டிற்கு சென்றுள்ளனர். சனிக்கிழமை அதிகாலை ராஜேந்திரன் மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து உயிர் இழந்துவிட்டதாக அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த உறவினர்கள், மருத்துவமனை நிர்வாகம் ஆக்சிஜன் வழங்காத காரணத்தால் ராஜேந்திரன் தற்கொலை செய்துகொண்டார் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கொரோனா நோயாளிக்கு உரிய பாதுகாப்பின்றி கவனக்குறைவாக சிகிச்சை அளித்தது தொடர்பாக 2 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.

 

Tags :

Share via