விமானப்படை தலைமை தளபதிக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு
கோவை ரெட்பீல்டில் உள்ள இந்திய விமானப் படை கல்லூரிக்கு நாடு முழுவதும் இருந்து 30க்கும் மேற்பட்ட ஆண், பெண் அதிகாரிகள் பயிற்சிக்காக வந்திருந்தனா். இதில், தில்லியைச் சோந்த பெண் அதிகாரி ஒருவா், வளாகத்தில் கூடைப்பந்து விளையாடியபோது காயம் ஏற்பட்டதையடுத்து வலி நிவாரணிகளை எடுத்துக்கொண்டு தனது அறைக்குச் சென்று ஓய்வு எடுத்தாா்.
அப்போது அதே வளாகத்தில் தங்கியிருந்த, பயிற்சிக்கு வந்த சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோந்த அமிதேஷ் ஹாா்முக் (பிளைட் லெப்டினென்ட்), அப்பெண்ணின் அறைக்குள் அத்துமீறி நுழைந்து அவரைப் பாலியல் வன்கொடுமை செய்தாா்.
இது குறித்து, விமானப் படை உயரதிகாரிகளிடம் அந்தப் பெண் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அவா் மாநகரக் காவல் ஆணையரைச் சந்தித்து புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த கோவை மத்திய பகுதி அனைத்து மகளிா் காவல்துறையினர் அமிதேஷ் ஹாா்முக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி உடுமலை கிளைச் சிறையில் அடைத்தனா்.இந்நிலையில், மாவட்ட கூடுதல் மகளிா் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை திங்கள்கிழமை நடைபெற்றது.அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த மாவட்ட கூடுதல் மகளிா் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) என்.திலகேஸ்வரி, விமானப் படை அதிகாரி அமிதேஷுக்கு விதிக்கப்பட்ட நீதிமன்றக் காவலை செப்டம்பா் 30 வரை நீட்டித்து உத்தரவிட்டாா்.
இதனிடையே, தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி கோவை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் அமிதேஷ் மனு தாக்கல் செய்தாா். அதே சமயம், அமிதேஷை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு கோவை மாநகரக் காவல் துறை சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது .
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு விமானப்படை மருத்தவ அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனை முறையை பயன்படுத்தியதாக தேசிய மகளீர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேசிய மகளீர் ஆணையத்தின் தலைவர் ரேகா அவர்கள், கண்டனம் தெரிவித்து, விமானப்படை தலைமை தளபதிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பாலியல் ரிதியாக பாதிக்கப்படக்கூடிய பெண்களுக்கு இருவிரல் சோதனை என்பது, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் இந்த சோதனை சிக்கலுக்கு உள்ளாக்குகிறது. இந்த சோதனைக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பெண்ணின் அந்தரங்க உறுப்புகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமானப்படை தலைமை தளபதிக்கு, தேசிய மகளீர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
Tags :