மதுரை எய்ம்ஸ் பணிகளை துவக்க பிரதமருக்கு முதல்வர் கடிதம்

by Editor / 05-06-2021 04:31:00pm
மதுரை எய்ம்ஸ் பணிகளை துவக்க பிரதமருக்கு முதல்வர் கடிதம்



மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவில் துவக்க வேண்டும் என பிரதமர் மோடிக்குமுதல்வர் ஸ்டாலின்கடிதம் எழுதி உள்ளார் .
அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளதாவது:மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து துவக்க வேண்டும். பணிகளை செயல்படுத்த அலுவலர்களுக்கு முழு அதிகாரங்களை அளிக்க வேண்டும். கடந்த 2019 ஜன.,27 ல் அடிக்கல் நாட்டிய போதும், எய்ம்ஸ் தலைவர், செயல் இயக்குநர் நியமிக்கப்பட்டதுடன், குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசுக்கு நிலம் அளித்த நிலையில் பணிகள் இன்னும் துவங்கவில்லை. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய குழுஇது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது: மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வு முறையால் தமிழகத்தில் உள்ள கிராமப்புற, நகர்ப்புற ஏழை எளிய மாணவர்கள், அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், தமிழ் வழியில் கல்வி பயில்வோர் போன்ற நமது சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ கல்வி பயிலும் வாய்ப்பு மறுக்கப்படுவதாக கல்வியாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். நீட் தேர்வு முறையானது சமுதாயத்தின் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்தும், அவ்வாறு பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால், அவற்றை சரி செய்யும் வகையில் இம்முறைக்கு மாற்றாக அனைவரும் பயன்பெறத்தக்க வகையிலான மாணவர் சேர்க்கை முறைகளை வகுத்து அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் அவற்றிற்கான சட்ட வழிமுறைகள் பற்றியும் முழுமையாக ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய உயர்நிலை குழு ஒன்று அமைக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

 

Tags :

Share via