ரூ. 25 கோடி நஷ்டஈடு கேட்டுஷில்பா ஷெட்டி வழக்கு: 

by Editor / 30-07-2021 05:10:56pm
 ரூ. 25 கோடி நஷ்டஈடு கேட்டுஷில்பா ஷெட்டி வழக்கு: 

ஆபாச பட விவகாரத்தில் கைதான ராஜ் குந்த்ராவின் வழக்கில் தன்னை தொடர்புப்படுத்தி செய்தி வெளியிட்ட சில ஊடகங்களிடமிருந்து ரூ. 25 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
ஆபாச படங்களை எடுத்து சில மொபைல் செயலிகளில் வெளியிட்டதாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும் தொழில் அதிபருமான ராஜ் குந்த்ராவை மும்பை காவல் துறையினர் ஜூலை 19ஆம் தேதி கைது செய்தனர்.


இவருடன் ரியான் தோர்பே என்பவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். ஆபாச படங்களைத் தயாரித்து அவற்றை மொபைல் செயலி மூலம் விநியோகம் செய்ததாகவும், ஆபாச படம் விற்பனை செய்ததற்கான பண பரிமாற்றங்களுக்கான ஆதாரம் கிடைத்துள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக, ராஜ் குந்த்ராவின் மனைவியும் நடிகையுமான ஷில்பா ஷெட்டியிடம் அவரது வீட்டிற்கு சென்று காவல் துறையினர் சோதனையும் விசாரணையும் மேற்கொண்டனர். கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் இந்த விசாரணை நடைபெற்றது.


அப்போது ராஜ் குந்த்ராவுக்கும் இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லையென்றும், அவர் அப்பாவி என்றும் ஷில்பா ஷெட்டி விசாரணையில் தெரிவித்தாக தகவல்கள் வெளியாகின.இந்நிலையில், ராஜ்குந்த்ராவின் வழக்கோடு தன்னையும் தொடர்புப்படுத்தி சில ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிடுகின்றனர். அவ்வாறு வெளியிட்ட ஊடகங்களிடமிருந்து நஷ்ட ஈடாக ரூ 25 கோடி தரும்படி ஷில்பா ஷெட்டி மும்பை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுத்துள்ளார்.


ஷில்பா ஷெட்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், என் பெயரை கெடுக்கும் வகையில், பொய்யான செய்திகள் வெளியாகியுள்ளன. என்னை பற்றி தவறான செய்தி வெளியிட்ட சில ஊடகங்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்..மேலும் என்னை பற்றிய தவறான செய்திகளை வெளியிட்டதன் நஷ்ட ஈடாக ரூ.25 கோடி அளிக்க வேணடும். அந்த வழக்கில் எனக்கு தொடர்பு இருப்பதாக வெளியான செய்திகளால் எனது நற்பெயர் பாதிக்கப்பட்டிருக்கிறது.குழந்தைகள்...குடும்பத்தினர் பெயர் கெட்டு போச்சுஎன்னை ஒரு குற்றவாளி போன்று சித்தரித்துள்ளனர்.


இந்த வழக்கு தொடர்பாக எனது கணவரை ஒதுக்கிவிட்டதாகவும் காட்டியுள்ளனர். இது போன்ற செய்திகள், வீடியோக்களால் ரசிகர்கள், பொதுமக்கள், சக கலைஞர்கள் மத்தியில் என் பெயர் கெட்டுவிட்டது. என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.

 

Tags :

Share via