வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி கோளாறு! ஆட்சியர் விளக்கம்

by Staff / 28-04-2024 03:02:17pm
வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி கோளாறு! ஆட்சியர் விளக்கம்

நீலகிரி தொகுதியில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உதகை அரசு கல்லூரியில் வைத்து சீல் வைக்கப்பட்டன. இங்கு கட்சி பிரமுகர்கள் காணக்கூடிய அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து விளக்கமளித்த மாவட்ட ஆட்சியர் அருணா, “அதிக வெப்பத்தால் ஷார்ட் சர்கியூட் ஏற்பட்டு சிசிடிவி செயலிப்பு ஏற்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளதால் எந்தவிதமான முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை” என்றார்.

 

Tags :

Share via

More stories