அமெரிக்காவில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை வெற்றி

by Editor / 17-08-2022 05:24:30pm
அமெரிக்காவில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை வெற்றி

கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்டதூர அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்கும் மினிட் மேன் 3 ஏவுகணை சோதனை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை மற்றும் நான்சி   வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தைவானை சுற்றி ஏவுகணை சோதனை மற்றும் ராணுவ பயிற்சிகளை சீனா மேற்கொண்ட நிலையில் பதற்றத்தை  தூண்டுவதாக எதிர்ப்பதற்காக ஏவுகணை சோதனை அமெரிக்க இரு முறை ரத்து செய்தது .இந்த நிலையில் கலிபோர்னியாவின் வானவர்க் விண்வெளி படைத் தளத்திலிருந்து பசுபிக் கடல் பகுதியில் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க விமானப்படை அறிவித்துள்ளது.இது  குறித்து கருத்து தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி பொறுப்புள்ள அணுசக்தியின் நடத்தையை  அமெரிக்கா வெளிப்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via