தென்காசியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு ஆய்வு
தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்து சட்டமன்ற மனுக்கள் குழுவிற்கு பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் குறித்து உரிய முறையில் விசாரணை செய்து பிரச்சினைக்கு தீர்வு காண மாவட்ட வாரியாக தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவினர் சென்று ஆய்வு செய்வது வழக்கம். இந்த நிலையில், இன்று தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சட்டமன்ற மனுக்கள் குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர். திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் கோவி. செழியன் தலைமையில் வந்த சட்டமன்ற மனுக்கள் குழு உறுப்பினர்கள் அமுல் கந்தசாமி, (வால்பாறை) மு.பெ.கிரி, (செங்கம்) கோவிந்தசாமி, (பாப்பிரெட்டிபட்டி) தகே.பி.சங்கர், (திருவெற்றியூர்) .எஸ்.சந்திரன், (திருத்தணி) எம்.எம்.வி.பிரபாகரராஜா, (விருகம்பாக்கம்) தே.மதியழகன், (பர்கூர்) சா.மாங்குடி, (காரைக்குடி) சட்டமன்ற மனுக்கள் குழு உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற செயலாளர் முனைவர் கி.சீனிவாசன், இணைச்செயலாளர் இரா.சாந்தி, சார்புச்செயலாளர் மோகன்ராஜா, ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார், (தென்காசி) சட்டமன்ற உறுப்பினர் செ.கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா, (கடையநல்லூர்) சதன் திருமலைக்குமார் வாசுதேவநல்லூர்ஆகியோர் உடன் இருந்தனர். தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட இலத்தூர், வடகரை, கடையநல்லூர், நயினாகரம் உள்ளிட்ட 8 பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.பின்னர் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மனுக்கள் குழு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது,5மணி நேரமாக நடந்த இந்த கூட்டத்தில் அனைத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மனுக்கள் குழுவின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.மேலும் மனுக்கள் குழுவில் வழங்கப்பட்ட மனுக்களுக்கு உடனடி நடவடிக்கைகளை எடுத்து பதிலளிக்க உத்திரவிட்டனர்.
Tags : Tamil Nadu Legislative Assembly Petitions Committee study in Tenkasi