சித்திரை பெருவிழா அரசுப் பொருட்காட்சி-ஆட்சியர் தகவல்.

மதுரையில் சித்திரை பெருவிழா அரசுப் பொருட்காட்சி மே 4ம் தேதி தமுக்கம் மைதானத்தில் தொடக்கம். அன்று தொடங்கி 45 நாட்கள் தினமும் மாலை 03.45 மணிமுதல் இரவு 10.00 மணி வரை நடைபெற உள்ளது!
பொருட்காட்சியின் நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.15. சிறியவர்களுக்கு ரூ.10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் 27 துறைகளின் அரங்குகள், பொழுதுபோக்கு அம்சங்கள், விற்பனை அங்காடிகள், உணவகங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் இருக்கும் எனவும்,
இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த தனியார் விளையாட்டு அரங்குகள், பல்பொருள் விற்பனை அங்காடிகள், இன்னிசை கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக - மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தகவல்.
Tags : சித்திரை பெருவிழா அரசுப் பொருட்காட்சி-ஆட்சியர் தகவல்.