தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு இடைத்தரகர்களுடன் தொடர்பு =அமலாக்கத்துறை
தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு செய்து, ஒப்பந்ததாரர்களிடம் இருந்து சுமார் ₹1,020 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி ஒப்பந்தத்தை மனோஜ்குமார் என்பவருக்குப் பெற்றுத் தருவதற்காக வருண் ஐ.பி.எஸ் இடைத்தரகர்களுடன் தொடர்பு கொண்டதாகவும் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வேண்டியவர்களுக்கு ஒப்பந்தங்களைப் பெற்றுத் தந்ததாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இந்த முறைகேடுகள் தொடர்பாகத் திரட்டப்பட்ட ஆதாரங்களை அமலாக்கத்துறை தமிழக டி.ஜி.பி-யிடம் சமர்ப்பித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது. அமலாக்கத்துறை வழங்கிய ஆதாரங்களில் முகாந்திரம் இருப்பதாகக் கருதி, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத் துறைக்குஉத்தரவிட்டுள்ளது.இந்த வழக்கில் அமைச்சர் கே.என்.நேருவின் பெயரும் அடிபடுகிறது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ஆளுங்கட்சி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :
















.jpg)

