கொடைக்கானல் பேரிஜம் ஏரி 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் திறப்பு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் ஏரி இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.மேலும் பேரிஜம் ஏரியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் இடம் பெயர்ந்ததால் சுற்றுலாப்பயணிகளின் பார்வைக்கு அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது.அனுமதியற்ற இடங்களில் வாகனங்கள் நிறுத்த வேண்டாம் எனவும், அதிக ஒலி எழுப்பும் ஹரன் பயன்படுத்த வேண்டாம் எனவும் சுற்றுலாப்பயணிகளுக்கு -வனத்துறை சார்பில் அறிவுறுத்தபட்டுள்ளது.
Tags :



















