திருமலை முருகனுக்கு நன்றி தெரிவித்து வேல் காணிக்கை செலுத்திய மோகன்லால்.
இந்திய திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் மோகன்லால் ஒரு தீவிர முருக பக்தர் ஆவார். புலி முருகன் படம் ஹிட் ஆனதைத் தொடர்ந்து அவர் தொடரும் என்கின்ற திரைப்படத்தில் நடித்து அந்த படம் தற்பொழுது வெற்றி படமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்தில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா பண்பொழியில் உள்ள அருள்மிகு திருமலை முருகன் ஆலயத்தின் உடைய திருமலை முருகனுக்கு அரோகரா என்கின்ற ஒரு பாடல் வரி இடம்பெற்றுள்ளது தீவிர முருக பக்தரான நடிகர் மோகன் லால் இந்த படத்தில் பெரும்பாலான கதாபாத்திரங்களுக்கு முருகன் சண்முகம் என்கின்ற பல்வேறு பெயர்களை சூட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படம் பயங்கர வெற்றி பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் வியாழக்கிழமை காலை 6:30 மணி அளவில் அவர் பண்பொழி அருள்மிகு திருமலை முருகன் ஆலயத்திற்கு தனது நண்பர்களோடு வந்து 3.5 அடி உயரம் கொண்ட செம்பு வேலை அங்கு பணியில் இருந்த பூசாரியிடம் காணிக்கையாக வழங்கி சிறப்பு தரிசனம் மேற்கொண்டார் இதன் தொடர்ச்சியாக அவர் திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டு சென்றார் நடிகர் மோகன்லால் வந்த செய்தி கேட்டு ஏராளமான ரசிகர்கள் பண்பொழி திருமலை முருகன் கோவிலுக்கு சென்று ஏமாற்றமடைந்து திரும்பி வந்த வண்ணம் இருந்தனர்.
Tags :



















