முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

by Staff / 08-10-2023 01:17:00pm
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை இந்தியா 100 பதக்கங்களை வென்றுள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள். 107 பதக்கங்கள் என்ற சாதனை மூலம் வீரர்கள், அவர்களின் திறன், மனஉறுதி, அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்தியாவில் உள்ள பல்வேறு விளையாட்டுகளின் திறமைகள் பிரகாசித்துள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு பாராட்டுகள். உங்களின் அசாத்திய பங்களிப்பின் மூலம் தமிழ்நாட்டின் பெருமையை சர்வதேச அளவில் ஒளிரச் செய்துள்ளீர்கள்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via