ஆப்கன் நிலநடுக்கம் - 2 ஆயிரம் பேர் பலி

by Staff / 08-10-2023 01:12:33pm
ஆப்கன் நிலநடுக்கம் - 2 ஆயிரம் பேர் பலி

மேற்கு ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை ஏற்பட்ட தொடர் நிலநடுக்கம் அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஹெராத் மாவட்டத்தின் 12 கிராமங்கள் முற்றிலும் அழிந்துள்ளன. நிலநடுக்கத்தால் 2 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக அரசுப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார். தொடர்ந்து ஏழு நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நிலையில், அவற்றில் 5 கடுமையானவை. நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக உலக சுகாதார அமைப்பின் குழுவினர் மருத்துவமனைகளுக்கு விரைந்து உள்ளனர்.

 

Tags :

Share via