கட்டணங்களை தள்ளுபடி செய்த இண்டிகோ

உள்நாட்டு விமான நிறுவனமான இண்டிகோ தனது பயணிகள் டிக்கெட்டுகளில் எரிபொருள் கட்டணத்தை தள்ளுபடி செய்வதாக நேற்று அறிவித்தது. இதன் மூலம் அந்தந்த வழித்தடங்களில் பயணிப்பவர்களுக்கு டிக்கெட் கட்டணம் ரூ.300 - ரூ.1,000 வரை குறையும். கடந்த அக்டோபர் மாதம் 6ஆம் தேதி முதல் விமான எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணச் சீட்டுகளில் எரிபொருள் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டமை தெரிந்ததே. ஏடிஎஃப் விலை குறைந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ தெளிவுபடுத்தியுள்ளது.
Tags :