ஒரே நாளில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

by Editor / 22-03-2025 02:01:01pm
 ஒரே நாளில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது


கோவை மாவட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கேரள கள்ளக்கடைகளில் கலப்படற்காக 5,145 லிட்டர் எரிசாராயம் விற்பனைக்காக குடோனில் பதுக்கி வைத்திருந்த வழக்கில் தொடர்புடைய மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்டவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜான் விக்டர் (44), ரஞ்சித் குமார் (37), மற்றும் கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (49) ஆவர். இந்த நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையின் அடிப்படையில், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், இந்த மூன்று நபர்கள் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நேற்று உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி, எரிசாராயம் விற்பனைக்குப் பதுக்கி வைத்திருந்த வழக்கில் குற்றவாளிகளான ஜான் விக்டர், ரஞ்சித் குமார் மற்றும் பிரபாகரன் ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via