கந்த சஷ்டி திருவிழா வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் அனுமதி சீட்டு-காவல்துறை அறிவிப்பு.
திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் மற்றும் அனுமதி சீட்டுடன் (Green Pass) வரும் வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவிப்பு.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 02.11.2024 அன்று தொடங்கி வருகின்ற 07.11.2024 அன்று சூரசம்ஹார நிகழ்வு மற்றும் 08.11.2024 அன்று திருக்கல்யாண நிகழ்வுடன் நிறைவுபெறகிறது.
மேற்படி திருவிழாவில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிகம் கூடும் முக்கிய நாட்களான 07.11.2024 மற்றும் 08.11.2024 ஆகிய நாட்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வாகன நிறுத்தும் இடங்களை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி தூத்துக்குடி சாலை வழியாக திருச்செந்தூருக்கு வரும் வாகனங்கள் J.J.நகர், ஆதித்தனார் மணிமண்டபம் எதிர்புறம், IMA மஹால் அருகில் (பிரசாத் நகர்), ITI எதிர்புறம் (விடுதி அருகில்), ITI வளாகம், ஆதித்தனார் விடுதி எதிர்புறம் ஆகிய 6 வாகன நிறுத்துமிடங்களிலும்,
திருநெல்வேலி சாலை வழியாக திருச்செந்தூருக்கு வரும் வாகனங்கள் சுப்பையா லேண்ட் (சபி டிரேடர்ஸ் அருகில்), வியாபாரிகள் சங்கம் (சபி டிரேடர்ஸ் எதிர்புறம்), வேட்டையாடும் மடம் (TNSTC BUS) அன்புநகர் (குமாரபுரம்), குமரன் ஸ்கேன் சென்டர் எதிர்புறம், ஆதித்தனார் குடியிருப்பு (கோவிந்தமாள் கல்லூரி எதிர்புறம்), அருள்முருகன் நகர் (பாண்டி சங்கராச்சாரியார் பள்ளி அருகில்) ஆகிய 7 வாகன நிறுத்துமிடங்களிலும்,
பரமன்குறிச்சி சாலை வழியாக திருச்செந்தூருக்கு வரும் வாகனங்கள் பால்பாயாசம் லேண்ட் ( FCI குடோன் கிழக்கு பகுதி), சுந்தர் லேண்ட் (பால்பாயாசம் லேண்ட் எதிர்புறம்), செந்தில்குமரன் பள்ளி (TNSTC BUS) ஆகிய 3 வாகன நிறுத்துமிடங்களிலும் வாகனங்களை நிறுத்த வேண்டும்.
மேலும் தூத்துக்குடி சாலை வழியாக திருச்செந்தூருக்கும், திருநெல்வேலி சாலை வழியாக திருச்செந்தூருக்கும் வாகன அனுமதிச் சீட்டுடன் (Green Pass) வரும் வாகனங்கள் திருச்செந்தூர் மெயின் ஆர்ச் வரை வந்து TB சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 3 வாகன நிறுத்திமிடங்களிலும்,
பரமன்குறிச்சி சாலை வழியாக வாகன அனுமதிச் சீட்டுடன் (Green Pass) வரும் வாகனங்கள் திருச்செந்தூர் முருகா மடம் வழியாக அரசு மருத்துவமனை பின்புறம் மார்க்கமாக மெயின் ஆர்ச் வரை வந்து மேற்படி TB சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 3 வாகன நிறுத்திமிடங்களிலும் தங்களது வாகனங்களை நிறுத்த வேண்டும்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற காவல்துறை சூழ்நிலைக்கேற்ப மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பக்தர்களும், பொதுமக்களும் காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Tags : கந்த சஷ்டி திருவிழா வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் அனுமதி சீட்டு-காவல்துறை அறிவிப்பு.