பிரபல பாடகி உடல் நலக்குறைவின் காரணமாக காலமானார்.

by Admin / 06-11-2024 11:16:09am
பிரபல பாடகி  உடல் நலக்குறைவின் காரணமாக காலமானார்.

பிரபல போஜ்புரி மைதிலி நாட்டுபுற பாடகி சாரதா சின்கா உடல் நலக்குறைவின் காரணமாக காலமானார். இவர் பத்மபூஷன் விருது பெற்றவர் . இவரது மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

: அக்டோபர் ஒன்றாம் தேதி 1952 ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்தில் சுபெளல் மாவட்டத்தில் ரா கோவூர் என்ற ஊரில் பிறந்தவர். அலகாபாத்தில் பிரயாக்  சங்க சமிதி ஏற்பாடு செய்த வசந்த பஞ்சமி விழாவில் வசந்த காலத்தில் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு ஏராளமான பாடல்களை வழங்கி மக்களின் கவனத்தைப் பெற்றவர். துர்கா பூஜை பண்டிகைகளின் போது இவருடைய இசை பாடல் ஒலிக்காமல் இருந்ததில்லை. 

1989இல் வெளிவந்த மைனே பியார் கியா என்ற வெற்றி படத்தில் ஹஹெ தோ சே சஜ்னா பாடலையும் பாடிஉள்ளவர் என்பதோடு பல்வேறு பாலிவுட் திரைப்படங்களுக்கு பாடல்களை பாடி உள்ளார் .. இவர் பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல பாடகி  உடல் நலக்குறைவின் காரணமாக காலமானார்.
 

Tags :

Share via