வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

by Staff / 31-05-2024 12:16:01pm
வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

கோவையை அடுத்த பூண்டி வெள்ளியங்கிரி மலைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். இந்த ஆண்டு, கடந்த பிப்.12ஆம் தேதி முதல் வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில், இன்று (மே 31) முதல் வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக பாதைகள் சேதம் அடைந்துள்ளதால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories